திருகோணமலை, உட்துறைமுக வீதியில் வேனொன்று, மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் சிறுமியொருவர் பலியாகியுள்ளார்.
இவ்விபத்து நேற்றிரவு (25) இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் கல்வி பயின்றுவந்த திருமலை – டொக்யாட் வீதி இலக்கம் 156/6 இல் வசித்து எட்ரிக் செர்லின் என்ற 9 வயது சிறுமியே விபத்தில் பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தாய், மகள் மற்றும் அவரது தம்பியின் மகள் ஆகியோர் பயணித்துக் கொண்டிருந்தவேளை, எதிரே வந்த சொகுசு வேனொன்று மோதியதினால் இவ்விபத்து இடம்பெற்றதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.
அத்துடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றைய ஐந்து வயது சிறுமி மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பில் வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.










