9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை

9 ஆவது நாடாளுமன்றம்! வேட்பு மனு தாக்கல் முதல் கலைப்புவரை

🛑 வேட்புமனுத் தாக்கல் – 12 மார்ச் 2020 – 19 மார்ச் 2020

🛑 தேர்தல் – 2020 ஆகஸ்ட் 05.

கட்சிகள் பெற்ற ஆசனங்கள்

🌷 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி – 128 + 17

(தேசியப்பட்டியல் – 17)

☎️ ஐக்கிய மக்கள் சக்தி – 47 + 07

🏠 தமிழரசுக் கட்சி – 09 +01

⏱ தேசிய மக்கள் சக்தி – 02 + 01

🚴‍♂️அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 01 +01

🛑 ஈபிடிபி – 02

🐘 ஐக்கிய தேசியக் கட்சி – 01 (தே.ப)

🏴 எமது மக்கள் சக்தி – 01 (தே.ப.)

🛳 தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி – 01

🤚 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 01

⚖️ முஸ்லிம் தேசியக் கூட்டணி – 01

🛑 தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி – 01

🦚 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 01

🐎 தேசிய காங்கிரஸ் – 01

🌳 முஸ்லிம் காங்கிரஸ் – 01

🛑 தேர்தலின் பின்னர் நாடாளுமன்றம் முதலாவதாக கூடிய திகதி 2020 ஆகஸ்ட் 20.

🛑 9 ஆவது நாடாளுமன்றம் இன்றுடன் கலைப்பு (24.09.2024)

( நாடாளுமன்றம் கலைப்பது தொடர்பில் ஜனாதிபதியால் வெளியிடப்படும் வர்த்தமானி அறிவித்தலில் வேட்பு மனு தாக்கலுக்கான திகதி, பொதுத்தேர்தலுக்கான திகதி மற்றும் நாடாளுமன்றம் கூடும் திகதி என்பன குறிப்பிடப்பட்டிருக்கும்.)

🛑 9 ஆவது நாடாளுமன்றம் மக்கள் ஆணைக்கு முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது.கட்சி தாவல்கள், ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலான சட்டமூலங்கள் நிறைவேற்றம் என பல விடயங்கள் நடந்தன.

🛑 மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெற்றிருந்த மொட்டு கூட்டணி, பொருளாதார நெருக்கடியின் பின்னர் நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை இழந்தது. அதுமட்டுமல்ல அறகலயவால் மொட்டு கட்சியின் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக நேரிட்டது.

🛑 நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புமூலம் ஜனாதிபதி ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார்.

🛑 மு.கா. சார்பில் மரம் சின்னத்தில் போட்டியிட்டு தெரிவான நஷீர் அஹமட், கட்சி முடிவுக்கு எதிராக செயற்பட்டதால் எம்.பி. பதவியை இழந்தார்.

🛑 மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவான முஷாரப், கட்சி முடிவுக்கு எதிராக அரசுடன் இணைந்துகொண்டார்.

🛑 இரட்டை குடியுரிமை விவகாரத்தால் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்புரிமையை இழந்தார். கட்சி மாறிய ஹரின் பெர்ணான்டோ மற்றும் மனுச நாணயக்கார ஆகியோரும் எம்.பி. பதவியை இழக்க நேரிட்டது.

🛑 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்.

🛑 அறகலயவின்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன.

🛑 பிரதி சபாநாயகரை தெரிவு செய்வதற்கு இரு தடவைகள் வாக்கெடுப்பு நடத்த வேண்டி ஏற்பட்டது.

🛑 சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டது. (அது தோற்கடிக்கப்பட்டது)

🛑 ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டுவருவதற்குரிய ஏற்பாடு இடம்பெற்றது. (அம்முயற்சி கைவிடப்பட்டது)

🛑 9 ஆவது நாடாளுமன்றத்தில் 28 தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டனர். அவர்களில் மூவர் தேசியப் பட்டியல் ஊடாக வந்தவர்கள்.

🛑 தந்தை, மகன்மார்கள் அங்கம் வகித்த நாடாளுமன்றமாகவும் விளங்கியது.

மஹிந்த ராஜபக்ச – நாமல் ராஜபக்ச

சமல் ராஜபக்ச – ஷசீந்திர ராஜபக்ச

ஜனக்க பண்டார தென்னகோன் – பிரதமித்த பண்டார தென்னகோன்

தினேஷ் குணவர்தன – யதாமினீ குணவர்தன

🛑 70 வயதுக்கு மேற்பட்ட 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் அங்கம் வகித்தனர். இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்.

🛑 9 ஆவது நாடாளுமன்றத்தில் 12 பெண் எம்.பிக்கள் அங்கம் வகித்தனர். டயான இடையில் பதவி இழந்துவிட்டார். கடைசியாக 11 பேர் செயற்பட்டனர். அவர்களில் ஒருவரான ஹரினி அமரசூரியவே இன்று பிரதமராகியுள்ளார். இலங்கையின் பிரதமர் பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் இவராவார்.

ஆர்.சனத்
raasanath@gmail.com

#SLnews #ParliamentofSriLanka #ParliamentLK #dissolved #PM

Related Articles

Latest Articles