9 மாணவர்களுக்கு கொரோனா – ஹட்டன் பொஸ்கோ கல்லூரிக்கு பூட்டு!

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் பொஸ்கோ கல்லூரி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

குறித்த கல்லூரியில் கல்வி பயிலும் 13 வயதான மாணவர் ஒருவருக்கு கடந்த 22 ஆம் திகதி கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனால் 37 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 9 மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் இருவருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்தே வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles