960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் கைது

குருவிட்ட பகுதியில் 960 போலி தங்க நாணயங்களுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தங்க நாணயங்களை 60 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 19 வயதான சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேகநபர் இன்று(19) நீதவான் நீதிமன்றில் முன்னிலைத்தப்படவுள்ளார்.

அத்துடன் குறித்த போலி தங்க நாணயங்களை வழங்கியதாக கூறப்படும் மற்றுமொரு சந்தேகநபரை தேடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Articles

Latest Articles