யுக்திய நடவடிக்கைக்கு ஆசிவேண்டி நல்லூர் கோயிலில் வழிபாடு…!

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ். நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம்பெற்றுள்ளது.

பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய வேலை திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

போதைப் பொருள் வியாபாரிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் மற்றும் பாதாள குழு உறுப்பினர்கள் என குற்றவாளிகள் பலரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், இன்றைய தினம் யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் பொலிசாரால் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

குறித்த விசேட பூஜை வழிபாட்டில் யாழ்ப்பாணம மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் குறித்த பூஜை வழிபாட்டில் கலந்து கொண்டனர்.

Related Articles

Latest Articles