9ஆவது பாராளுமன்றத்தில் 15 அரசியல் கட்சிகள்!

பாராளுமன்றத்துக்கு தெரிவான அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் பிரகாரம் நாடாளுமன்றத்தில் 6 அரசியல் கட்சிகளே அங்கம் வகித்தன.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, இலங்கைத் தமிழரசுக்கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஈ.பி.டி.பி. ஆகியன அக்கட்சிகளாகும்.

ஆனால் இம்முறை அந்த எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. பொதுத்தேர்தலில் 15 கட்சிகள் ஆசனங்களை வென்றுள்ளன. இதில் ஐக்கிய தேசியக்கட்சி, எமது சக்தி மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒவ்வொரு தேசியப்பட்டியலே கிடைக்கப்பெற்றுள்ளது.

கட்சிகள் விபரம் வருமாறு,

1. ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன.
2. தேசிய மக்கள் சக்தி
3. இலங்கை தமிழ் அரசுக்கட்சி
4. தேசிய மக்கள் சக்தி
5. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்
6.ஈ.பி.டி.பி.
7.ஐக்கிய தேசியக் கட்சி
8.எமது சக்தி மக்கள் கட்சி
9.தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
10.ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி
11. முஸ்லிம் தேசிய கூட்டணி
12.தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
13.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
14.தேசிய காங்கிரஸ்
15.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்.

நாடாளுமன்றத்தில் நடைபெறும் விவாதங்களின்போது மேற்படி 15 கட்சிகளுக்கும் நேரம் ஒதுக்கப்படவேண்டும். கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு 15 கட்சிகளின் பிரதிநிதிகளையும் அழைக்கவேண்டும் என்பது உட்பட பல வரப்பிரதாசங்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு இருக்கின்றன.

Related Articles

Latest Articles