இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி – 20 தொடரின் முதல் ஆட்டம் நாளை மறுதினம் (04) நடைபெறவுள்ளது.
2ஆவது ரி – 20 போட்டி மார்ச் 6 ஆம் திகதியும், மூன்றாவது ரி – 20 போட்டி மார்ச் 9 ஆம் திகதியும் பங்களாதேஷில் நடைபெறவுள்ளது.
வனிந்து ஹரசங்கவுக்கு போட்டி தடை விதிக்கப்பட்டுள்ளதால் முதல் இரு போட்டிகளுக்கும் சரித் அசலங்க தலைமை வகிப்பார். மூன்றாவது போட்டியில் வசிந்து ஹசரங்க இணைந்துகொள்வார்.
குசல் பெரேராவுக்கு பதிலாக நிரோஷன் டிக்வெல்ல அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
சிம்பாப்வே, ஆப்கானிஸ்தான் அணிகளை வெற்றிகொண்டு பலமாக இருக்கும் இலங்கை அணி, பங்களாதேஷ் அணியை அவர்களில் சொந்த மண்ணில் வைத்து வீழ்த்த வேண்டும் என்பதே இலங்கை இரசிகர்களின் எதிர்பார்ப்பாகும்.