2ஆவது அலைமூலம் 12,226 பேருக்கு கொரோனா! 3 நாட்களில் 12 மரணங்கள்!!

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் 2 ஆவது அலைமூலம் இதுவரையில் 12 ஆயிரத்து 226 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. நேற்று மாத்திரம் 635 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

மினுவாங்கொட கொத்தணி – 3,106

பேலியகொடை- 9,120

நாட்டில் நேற்று மாத்திரம் 10 ஆயிரத்து 111 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை 6 லட்சத்து 37 ஆயிரத்து 122 பிசிஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இலங்கையில் கொரோனா மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 10 ஆயிரத்து 653 பேர் குணமடைந்துள்ளனர். 5 ஆயிரத்து 121 பேருக்கு சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. 48 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 3 நாட்களில் மாத்திரம் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Latest Articles