தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் பொதுத்தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும் என்று ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தரான இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் பஸில் ராஜபக்சவுடன் நேற்று நடைபெற்ற சந்திப்பின் பின்னரே அவர் இந்த தகவை வெளியிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இச்சந்திப்பின் பின்னர் கருத்து வெளியிட்ட உதயங்க வீரதுங்க கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும். புத்தாண்டு முடிந்த பின்னர் பொதுத்தேர்தலுக்கு நாள் நிர்ணயிக்கப்படும். அதில் பெரும்பான்மை பலத்தை மொட்டு கட்சி கைப்பற்றும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஜனாதிபதியின் பதவி காலம் முடியும்வரை ரணிலுக்கு ஆதரவு வழங்குவோம். அதன்பின்னர் ஆதரவு இல்லை. முதலில் பொதுத்தேர்தலே நடத்தப்படும், அதன்பின்னர் ஜனாதிபதி தேர்தல் பற்றி பேசுவோம்.” – என்றார்.