மருமகனின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாமனார் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் ஹொரவபொத்தான பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
ஹொரவபொத்தான , முக்கரவெவ பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின்போது உயிரிழந்தவரின் மகளுக்கும் அவரது கணவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது, இவர் இருவருக்கு இடையில் சமரசத்தை ஏற்படுத்த முயன்றபோது, மகருமகன் அவரை பலமாக தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் ஹொரவபொத்தான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.