டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் முதலிடத்தை பிடித்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தரம்சாலா டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம் அஸ்வின் தரவரிசை பட்டியலில் 870 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
முதலிடத்தில் இருந்த வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரீத் பும்ரா 847 புள்ளிகளுடன் 2-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட்டுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இலங்கை அணி பந்துவீச்சாளரான பிரபாத் ஜயசூரிய 783 புள்ளிகளுடன் 8 ஆவது இடத்தில் காணப்படுகின்றார்.