சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடித்து ஆளுங்கட்சியின் பலத்தை வெளிப்படுத்துவோம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
“இது தேவையற்றதொரு பிரேரணையாகும். நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாம் நிராகரிக்கின்றோம். சபாநாயகரை நாம் பாதுகாப்போம். பிரேரணையை தோற்கடிக்க நடவடிக்கை எடுப்போம்.
கூட்டத்துக்கு சபாநாயகர் தலைமை தாங்கினாலும் அவர் அநீதியான முறையில் செயற்படவில்லை. விவாதத்துக்கு இரு நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, எந்த பூ மலர்ந்தாலும் மொட்டு இருந்தால்தான் பூ மலரும் என்பதை கூறி வைக்க விரும்புகின்றேன்.” – எனவும் மொட்டு கட்சி செயலாளர் கூறினார்.
