வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் எம்.பிக்களை நாளை புதன்கிழமை முற்பகல் 11:30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் உள்ள தமது அலுவலகத்தில் சந்தித்துப் பேசுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.
இந்த விவகாரத்தை ஒட்டிய விடயங்களை ஜனாதிபதி தரப்புடன் கையாளும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு இந்த நேர ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நேற்று மாலை இந்தச் சந்திப்பை நடத்துவதற்கு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இந்தச் சந்திப்பு நாளை புதன்கிழமை நண்பகல் நாடாளுமன் றக் கட்டடத் தொகுதியில் நடைபெறும் என அவர் ஏனைய எம்.பிக்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
அனேகமாக தமிழ்த் தேசியக் கட்சிக ளின் எம்.பிக்கள் இந்தச் சந்திப்பில் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யின் இரண்டு எம்.பிக்களும் கூட இதில் பங்குபற்றக்கூடும். நாளைய தினம் காலையில் தமக்கு முக்கிய வழக்குகள் கொழும்பு நீதிமன் றங்களில் இருக்கின்றன என்றும், அவை நேரத்துடன் முடிந்தால் தாம் நேரில் வந்து சந்திப்பில் பங்குபற்றுவார் என்றும் ஜனாதி பதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் எம். பி. நேற்று நீதியரசர் விக்னேஸ்வரனுக்குத் தெரியப்படுத்தினார் என அறியவந்தது.
தப்பித் தவறி நீதிமன்ற விடயம் காரண மாக இந்தச் சந்திப்பில் சுமந்திரன் பங்கு பற்ற முடியாமல் இருக்குமானால், மேற் படி ஜனாதிபதியுடனான சந்திப்பில் வெடுக்குநாறிமலை விடயத்தை ஒட்டி வலியுறுத்தப்பட வேண்டிய விடயங்கள் பற்றிய வழிகாட்டல் குறிப்பு ஒன்றை எழுத்தில் விவரமாக அனுப்பி வைக்கும்படி நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் மின்னஞ்சல் கடிதம் மூலம் சுமந்திரனைக் கோரி யிருக்கின்றார் என்றும் தெரியவந்தது.
