ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து 1000 மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவா? விளக்கம் கோரும் இ.தொ.கா!

மத்திய மாகாணத்தின் ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து இவ்வருடம் ஆயிரம் மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளனர் என்ற தகவலின் உண்மைத்தன்மையை சமூகத்துக்கு வெளிப்படுத்துமாறு மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ், மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே எழுதியுள்ள அவசர கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

ஹட்டன் கல்வி வலயத்திலிருந்து தேசிய பல்கலைக்கழகங்களுக்கு ஆயிரம் பேர் தெரிவு செய்யப்பட்டு இருந்தால் அதைவிட மகிழ்ச்சியான விடயம் எதுவும் இருக்க முடியாது. இந்த செய்தி உண்மையாக இருப்பின் மலையகத்தின் கல்வி வளர்ச்சி மட்டத்தை தாண்டி பெரும் பாய்ச்சல் மட்டத்தை அடைந்திருக்கிறது என்பதில் இரண்டு கருத்துக்கள் இருக்க முடியாது.

ஆனால் வழங்கப்பட்டிருக்கின்றது தகவல்கள் பிழையானதாக இருப்பின் அது முழு சமூகத்தையும் ஏமாற்றும் நடவடிக்கையாகும். பொதுவாக கல்வி அதிகாரிகள் தகவல்களை வெளியிடும் போது புள்ளி விபரங்களுடன் வெளியிட வேண்டும். இந்த விடயம் தொடர்பாக உண்மையை தெரிந்து கொள்வதற்காக மலையகத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் வாழுகின்ற மலையக கல்வியில் ஆர்வமுடையவர்கள் பெருத்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்.

இந்த செய்தி வெளிவந்தவுடன் பலர் எம்மோடு தொடர்பு கொண்டு ஹட்டன் கல்வி வலையத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் தொடர்பான உண்மைத் தன்மையை தெளிவுபடுத்துமாறு கோரி வருகின்றனர்.

இந்தநிலையில் எமக்கு கிடைத்த தகவலின்படி கட்டன் கல்வி வலயத்திலிருந்து 386 பேர் தமிழ் மொழி மூலமும் சிங்கள மொழி மூலமும் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன.

எனினும் உத்தியோகபூர்வமான பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களின் விவரங்களை மத்திய மாகாண கல்வித் திணைக்களம் இருந்து எதிர்பார்க்கின்றோம். ஆகவே மத்திய மாகாணத்தின் கல்வி வலயத்திலிருந்து இலங்கை தேசிய பல்கலைக் கழகங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களின் முழு விவரங்களையும் பொதுமக்களுக்கு பொறுப்புடன் தெரிவிக்க வேண்டியது மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் பொறுப்பாகும்.

ஆகவே இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்தும் கேட்டுக்கொள்கிறேன்கேட்டுக்கொள்கிறேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles