ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் மாகாணசபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதியால் காணாமல்ஆக்கப்பட்டுள்ள உள்ளாட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டியுள்ளது. அதிகாரப்பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில்தான் மாகாணசபை உருவாக்கப்பட்டது. அந்தசபைகளை ஆளுநர்கள்தான் தற்போது நிர்வகிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதுகூட அரசமைப்புமீறல் செயலாகும்.
எனவே, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றிபெற்ற பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் அதன்பின்னர் கூடியவிரைவில் மாகாண மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல்கள் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமையை பாதுகாப்போம்.” -என்றார் திஸ்ஸ அத்தநாயக்க.
