மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
சிசிரிவி காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு விசேட பொலிஸ் பிரிவொன்று விசாரணை நடத்திவருகின்றது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மஸ்கெலியா நகரில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் உட்பட மூன்று வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
செதி பெருமாள்
