பலாங்கொடை பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸொன்றில் 14 வயது சிறுமிக்கு, அந்தரங்க உறுப்பை காட்டிய இளைஞர் ஒருவர் பலாங்கொடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி மாலை வகுப்பை நிறைவு செய்துவிட்டு தனது வீட்டிற்கு செல்ல பஸ் ஆசனத்தில் அமர்ந்து இருந்தவேளை , அருகில் உள்ள இருந்த இளைஞன் ஒருவர் தனது அந்தரங்க உறுப்பை காட்டியுள்ளார்.
பஸ்ஸில் இருந்த பயணிகள் சிலர் இந்த விடயத்தை பலாங்கொடை பொலிஸாரிடம் தெரிவித்ததை அடுத்து குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞன், பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.
எம்.எப்.எம். அலி
