வவுனியாவில் ரி – 56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின்போது செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியில் ரி56 துப்பாக்கி ரவைகள் 13 உம், 1005 மில்லிகிராம் ஹெரோ யின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளன.
இதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயது டைய இளைஞர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு செட்டிகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.










