ஹப்புத்தளையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு!

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹிம்பிலியாகஹ எல்ல , பிட்டபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் இருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

போவத்தை, இதழ்கஸ்ஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்துக்கு சென்று நீதவான், சடலத்தை பார்வையிட்ட பின்னர், சடலம் உடற் கூற்று பரிசோதனைக்காக தியத்தலாவ வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் ஆலோசனையின் பேரில் ஹப்புத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சேபால ரத்னாயக தலைமையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles