ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார். எனவே, முதலில் ஜனாதிபதி தேர்தலே நடத்தப்படும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ கிரிக்கெட் விளையாட்டில் நடுவர்களிடம் ஆட்டமிழப்பா இல்லையா என வீரர்கள் வினவலாம். அதற்கான உரிமை அவர்களுக்கு உள்ளது. ஆனால் போட்டி விதிமுறைகளுக்கு அமையவே நடுவரின் தீர்ப்பு அமையும்.
அதுபோலவே முன்கூட்டியே பொதுத்தேர்தலை நடத்துமாறு சிலர் கோரலாம். எனினும், ஜனாதிபதி அரசமைப்பின் பிரகாரமே செயற்படுவார்.
நாடு முன்னேற வேண்டுமெனில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற வேண்டும்.” – என்றார்.
