ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ள டலஸ் அழகப்பெரும, உதய கம்மன்பில, விமல்வீரவன்ச ஆகியோரை மீண்டும் இணைத்துகொள்வதற்கான பேச்சுகளை மஹிந்த ராஜபக்ச உடன் ஆரம்பிக்க வேண்டும் என்று மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் எஸ்.பி. திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,
“ விமல், உதய கம்மன்பில, டலஸ் போன்றவர்கள் ஒன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய வேண்டும். இல்லையேல் எமது பக்கம் வர வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அவர்களால் நாடாளுமன்றம் வர முடியாது.
மேற்படி தரப்புகளை எமது கட்சி இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியம். அதற்கான வேண்டுகோளை நான் விடுத்துள்ளேன். பேச்சு ஆரம்பமாகும் என நம்புகின்றேன்.
இவர்களை இணைப்பதற்கான பேச்சை கட்சி தலைவர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ச உடன் ஆரம்பிக்க வேண்டும்.” – என்றார் எஸ்.பி. திஸாநாயக்க.










