வவுனியாவில் 23 வயது யுவதி சடலமாக மீட்பு!

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து 23 வயது யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று சிதம்பரபுரம் பொலிஸார் இன்று தெரிவித்தனர்.

சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுகின்றார் என்று சிதம்பரபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற பொலிஸார், யுவதியின் சடலத்தை மீட் டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் ஆசிகுளம், சிதம்பரபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய கவிப்பிரியா என்பவராவார். இது தொடபில் சிதம்பரபுரம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

Related Articles

Latest Articles