முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு – உடையார்கட்டு குளப்பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த 23 வயது இளைஞர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இக் கைது இடம்பெற்றுள்ளது.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.
