ரணிலுக்கு ஆதரவாக கருணா அம்மான் களத்தில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தல் களத்தில் களமிறங்குவாராயின் அவருக்கு எமது கட்சி ஆதரவு வழங்கும் என்று தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பொதுத்தேர்தல் வந்தால் கூட்டாக களமிறங்குவதா அல்லது தனித்து களமிறங்குவதா என்பது பற்றி கட்சி முடிவெடுக்கும் எனவும் அவர் கூறினார்.

“ கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் நாடு பாதாளத்துக்குள் தள்ளப்பட்டது. அதனால்தான் அவர் விரட்டியடிக்கப்பட்டார். இதனையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வந்த பின்னர் கடும் நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை கட்டியெழுப்பியுள்ளார்.” -எனவும் கருணா அம்மான் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles