தேசிய பட்டியலை நிராகரித்தார் சனத் நிஷாந்தவின் மனைவி: மக்கள் ஆணையுடனேயே சபைக்கு வருவேனென சபதம்

அடுத்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு தான் தயார் என்பதை கட்சியின் உயர்மட்டத்துக்கு விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவியான சட்டத்தரணி சாமரி பெரேரா தெரியப்படுத்தியுள்ளார்.

சனத் நிஷாந்தவுக்கு மதிப்பளிக்கும் வகையிலும், கட்சிக்காக அவர் ஆற்றிய சேவைகளுக்கு பிரதி உபகாரமாகவும் சாமரி பெரேராவுக்கு தேசியப்படடியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க மொட்டு கட்சி முன்வந்திருந்தது.

கடைசியாக நடைபெற்ற மொட்டு கட்சியின் நிறைவேற்றுக்குழு கூட்டத்திலும் இது பற்றி ஆராயப்பட்டுள்ளது. அவ்வேளையிலேயே புத்தளம் மாவட்ட மக்களின் ஆணையுடன்தான் நாடாளுமன்றம் வருவேன் என அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் நியமிக்கப்பட்டுள்ள குழுக்காற்று விசாரணைக்குழுவின் உறுப்பினராக சட்டத்தரணி சாமரி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles