இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 7 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 440 ரூபாவாக அமைந்துள்ளது.
லங்கா சுப்பர் டீசலின் விலை 72 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 386 ரூபாவாகும்.
மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.புதிய விலை 245 ரூபாவாகும்.
ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் லங்கா ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லை.
அதேவேளை, சமையல் எரிவாயு விலையில் இம்மாதம் திருத்தம் மேற்கொள்ளப்படமாட்டாது என தெரியவருகின்றது.










