பொகவந்தலாவ, பெற்றோசோ, பிரீட்லேன்ட் தோட்டத்தில் உள்ள முதலாம் இலக்க லயன் குடியிருப்பில் சுவரொன்று பகுதியளவு இடிந்து விழுந்துள்ளது. நேற்று மாலையே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த லயன் குடியிருப்பு 100 வருடங்கள் பழமையானது எனவும், 20 லயன் அறைகள் காணப்படுவதாகவும், சுமார் 75 பேர் வசித்துவருகின்றனர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த லயன் தொகுதி உடைந்துவிழக்கூடும் என்பதால் தமக்கு பாதுகாப்பான இடத்தில் மாற்று ஏற்பாடுகளை செய்துதருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிரதேசத்துக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் ஊடாக நோர்வூட் பிரதேச செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை சேர்ந்த ஜந்து பேர் உறவினர் வீட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவ நிருபர் சதீஸ்