ஐ.பி.எல்லில் சதங்கள் குவிப்பு: கெயிலை முந்தினார் பட்லர்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பட்லர் சதம் அடித்து அசத்தினார்.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இதில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் திரில் வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணி சுனில் நரைனின் அபார சதத்தின் மூலம் 20 ஓவர்களில் 223 ஓட்டங்கள் குவித்தது.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி பட்லரின் சதத்தின் உதவியுடன் கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பட்லர் அடித்த சதம் ஐ.பி.எல். தொடரில் அவரது 7-வது சதமாக பதிவானது.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறீஸ் கெயிலை முந்தி 2-வது இடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் 8 சதங்களுடன் விராட் கோஹ்லி முதலிடத்தில் உள்ளார்.

அந்த பட்டியல்:-
1. விராட் கோஹ்லி – 8 சதங்கள்
2. பட்லர் – 7 சதங்கள்
3. கிறிஸ் கெயில் – 6 சதங்கள்

Related Articles

Latest Articles