ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்கள் பக்கம் நிற்கும்வரை அவரால் மலையக பெருந்தோட்ட மக்களின் ஆதரவைபெற முடியாது – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
அத்துடன், மலையக பெருந்தோட்ட மக்கள் சஜித் பக்கமே நிற்கின்றனர் எனவும் அவர் கூறினார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மொட்டு சின்னத்தில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற டிரான் பெரேரா, அரசியல் நெருக்கடியின்போது டலஸ் பக்கம் நின்றார். தற்போது சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.