தனது மனைவியை கணவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி கொலை செய்துள்ள கொடூர சம்பவமொன்று மாத்தளை, எல்கடுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின்போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தின் பின்னர் உயிரிழந்த பெண்ணின் கணவனை, ஊர் மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.