குறுந்தகவல் ஊடாக மோசடி: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் இருந்து பொதிகள் கிடைத்துள்ளன என தெரிவித்து குறுந்தகவல் ஊடாக வாடிக்கையாளர்களின் கடனட்டை தொடர்பான தகவல்களை பெறும் மோசடி குறித்து அவதானமான இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இப்படியான மோசடி சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
போலி இணையத்தளம், போலி தொலைபேசி இலக்கங்கள் மூலம் இந்த மோசடி இடம்பெறுவதாக தபால் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தபால் திணைக்களத்தினை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் இவ்வான மோசடிகளில் சிக்க வேண்டாம் எனவும் குறித்த திணைக்களம் மக்களிடம் கோரியுள்ளது.

தபால் திணைக்களமானது, கடன் அட்டைகள் தொடர்பில் குறுஞ்செய்திகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் தகவல்களை பெற்றுக்கொள்வதில்லை என தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Latest Articles