காலக்கெடு முடிந்துவிட்டது 1,700 ரூபா எங்கே? நாடகமாடாமல் சொன்னதை செய்யுங்கள்…

“ மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் ஆயிரத்து 700 ரூபா கிடைக்கும் என்றார்கள். ஆனால் இன்னும் சம்பள உயர்வு கிடைக்கப்பெறவில்லை. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்துகின்றோம்.”

இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

கண்டியில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ சம்பளப் பேச்சுவார்த்தையில் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அப்பட்டமாக காட்டிக்கொடுக்கப்பட்டுள்ளனர். கம்பனிகளோடு சம்பள உயர்வு குறித்து பேரம் பேசுகின்றோம் எனக்கூறி நாம் 200, பொங்கல் விழா, ஜல்லிக்கட்டு என தங்களுக்கு தேவையான நிகழ்ச்சிகளை நடத்த வசதி வாய்ப்புகளை வாங்கிவிட்டார்கள். தோட்டத் தொழிலாளர்கள் கைவிடப்பட்டுள்ளார்கள்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உட்பட மலையக மக்கள் தொடர்பில் ஆட்சியாளர்களால் வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகள் மீறப்பட்டுள்ளன.

தற்போது இந்த ஆயிரத்து 700 ரூபாவை இழுத்தடித்து, அடுத்த தேர்தல் வாக்குறுதியாக அதனை வழங்குவதற்கான முயற்சி இடம்பெறுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. எனவே, நாடகமாடாமல் ஆயிரத்து 700 ரூபாவை பெற்றுக்கொடுக்கவும்.” – என்றார்.

Related Articles

Latest Articles