பஞ்சாப், மும்பை அணிகள் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இன்று நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) முல்லாப்பூரில் நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் சந்திக்கின்றன.

பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டெல்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது.

உள்ளூர் மைதானமான முல்லாப்பூரில் நடந்த முந்தைய 2 ஆட்டங்களில் அந்த அணி தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ளது.
பஞ்சாப் அணியின் தலைவரும், தொடக்க ஆட்டக்காரருமான ஷிகர் தவான் தோள்பட்டை காயத்தால் ஓய்வில் இருக்கிறார். அவர் முழு உடல் தகுதியை எட்ட குறைந்தது ஒரு வாரம் பிடிக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்திலும் ஆடமுடியாது. இது அந்த அணிக்கு பெரிய இழப்பாகும்.

தலைவர் பொறுப்பை சாம் கர்ரன் கவனிப்பார். பேட்டிங்கில் கடைசி கட்டத்தில் ஷசாங்க் சிங், அஷ_தோஷ் ஷர்மா அதிரடியாக செயல்பட்டு அசத்துகிறார்கள். ஆனால் பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் ஷர்மா போதிய பங்களிப்பை அளிக்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
ஆல்-ரவுண்டர்கள் சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோரும் ஏற்றம் காண வேண்டியது அவசியமாகும். பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், ரபடா, ஹர்ஷல் பட்டேல் வலுசேர்க்கிறார்கள்.

5 முறை சாம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது. ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ரன் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

Related Articles

Latest Articles