இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அணு நிலையங்களுக்கு பாதிப்பில்லை…

இஸ்ரேலின் தாக்குதலால் ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது.

நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள மேற்படி அமைப்பு, அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது எனவும் ஐ.நா. அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Latest Articles