தியத்தலாவை விபத்து குறித்து விசாரிக்க எழுவரடங்கி விசாரணைக்குழு நியமனம்

தியத்தலாவ – Foxhill வாகன விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினரால் 7 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர், மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் மற்றும் பார்வையிடுவதற்காக வருகை தந்தவர்களுக்கான பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்பட்டதா போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தியத்தலாவயில் இடம்பெற்ற விபத்து தொடர்பான அறிக்கை எதிர்வரும் 10ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என இராணுவ ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 21ஆம் திகதி தியத்தலாவயில் இடம்பெற்ற Foxhill கார் பந்தயத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு சாரதிகளும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles