வவுனியா,செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் அம்புலன்ஸ் வாகனம் உள்ளிட்ட வாகனங்களை வழிமறித்து வீதிக்கு வந்த யானைகள் வீதியைக் குறுக்கறுத்து அட்டகாசம் செய்துள்ளன.
செட்டிகுளம், பறயனாளங்குளம் பகுதியி லேயே இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பகுதியில் தொடர்ச்சியாக யானைகள் வீதியில் நின்று போக்குவரத்துக்கு இடையூறு செய்துவருகின்றன என்று அவ்வீதியால் பயணம் செய்யும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் இதே பகுதியில் பல மின்கம்பகளை உடைத்து யானைகள் சேதமாக்கியிருந்தன. இந்நிலையில், இன்று காலை நோயாளர்களை ஏற்றி வந்த அம்புலன்ஸ் வாக னத்தையும் யானைகள் வழிமறித்ததுடன் நீண்ட நேரமாக போக்குவரத்துக்கு இடை யூறாக வீதியில் நின்று பொதுமக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
மேலும், இந்த வீதியூடாகப் பயணிப் பவர்களும் அண்மித்துள்ள கிராமவாசி களும் யானைகளால் உயிர் அச்சுறுத் தலுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
