போதைப்பொருள் வியாபாரியின் ரூ. 9 கோடி பெறுமதியான சொத்துகள் முடக்கம்!

யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது மன்னாரில் கைதான சந்தேகநபர் ஒருவரின் 9 கோடியே 30 இலட்சம் பெறுமதியான சொத்துக்கள் இன்று முடக்கப்பட்டுள்ளன.

தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 43 வயதான சந்தேகநபர் ஒருவருக்குச் சொந்தமான இரண்டு வீடுகள், சொகுசு வாகனம் உள்ளடங்கலாக 9 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத் துக்கள் இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி சந்தேகநபர் 2002 ஆம் ஆண்டு அரச வீட்டுத்திட்டம் ஒன்றைப் பெற்று இரண்டு படகுகளை வைத்து சாதாரண குடும்பமாக வாழ்ந்து வந்த நிலையில் 2019 பின்னர் குறிப்பிட்ட காலத்துக்குள் பல கோடி சொத்துக்களைச் சேர்த்துள்ளார்.

அதனடிப்படையில் குற்றப் புலனாய் வுப் பிரிவின் கீழ் இயங்கும் சொத்து முடக்கல் பிரிவினர் கடந்த இரண்டு வருடங்களாக மேற்கொண்ட விசாரணை யின் அடிப்படையில் இன்று நீதிமன்ற அனுமதியைப் பெற்று வவுனியா பிரதிப் பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜசேகர மேற்பார்வையின் கீழ் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபாலவின் தலைமையில் கொழும்பு குற்றப் புல னாய்வுப் பிரிவின் சட்டவிரோத விசார ணைப் பிரிவு பொலிஸாரால் தற்காலி கமாக இன்றில் இருந்து 7 தினங்க ளுக்குச் சந்தேகநபரின் சின்னக்க டையில் காணப்படும் கடைத் தொகுதி யுடன் கூடிய வீடு ஒன்றும், தலைமன்னார் பகுதியில் உள்ள விசாலமான வீடு ஒன்றும், சொகுசு வாகனம் ஒன்றும் முடக்கப்பட்டுள்ளன.

அதேநேரம் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட் டுள்ளார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன் றத்தின் அனுமதியுடன் சொத்துக்களை அரசுடமையாக்கும் செயற்பாட்டை மேற் கொள்ளும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

 

Related Articles

Latest Articles