மே 6 O/L பரீட்சை ஆரம்பம்! 3,521 பரீட்சை நிலையங்கள் அமைப்பு

மே 6 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதிவரை சாதாரணதரப்பரீட்சை நடைபெறும் . 4 லட்சத்து 52 ஆயிரத்து 979 பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

பாடசாலைகளில் இருந்து 3 லட்சத்து 87 ஆயிரத்து 648 விண்ணப்பங்களும், தனியாரிடமிருந்து 65 ஆயிரத்து 331 விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 3 ஆயிரத்து 521 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெறும்.

வடக்கில் தீவு பகுதி உட்பட சில விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்படும். கைதிகளுக்காக வெலிக்கடை சிறைச்சாலையில் பரீட்சை நிலையமொன்றும், மஹரகம வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறுபவர்களுக்காக அங்கு பரீட்சை நிலையமொன்றும், தங்காலை மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கான பரீட்சை நிலையங்களும் இயங்கும்.

அதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசி, இலத்திரனியல் உபகரணம் உள்ளிட்ட பரீட்சை நிலையங்களுக்கு கொண்டுவருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள உபகரங்கள் கொண்டுவரப்படும் விகிதம் அதிகரித்துள்ளது. எனவே, இம்முறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பரீட்சை எழுத தடைவிதிக்கும் இந்த நடவடிக்கையில் எவரும் ஈடுபடக்கூடாது.

Related Articles

Latest Articles