தோட்ட தொழிலாளர்களை கவனிக்க முடியாவிட்டால் கம்பனிகள் வெளியேறலாம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களை பெருந்தோட்ட நிறுவனங்களால் கவனிக்க முடியாவிட்டால் இயலுமானவர்களிடம் தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு தொழில் அமைச்சர் மனுச நாணயக்கார வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

“ பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சம்பளம் தொடர்பில் கருத்துகளை முன்வைக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளன. எனவே, பேச்சு நடத்த முன்வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்.

அவ்வாறு முடியாவிட்டால், தோட்ட மக்களை கவனிக்க முடியாவிட்டால், இயலுமானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவர்களால் செல்ல முடியும்.” – எனவும் தொழில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles