ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக தீர்மானிக்க முடியாது என்று அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
சுதந்திரக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நீதி அமைச்சர் விஜயதாச களமிறங்குவார் என அக்கட்சியின் முன்னாள் தலைவரான மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.
இந்நிலையிலேயே தயாசிறி ஜயசேகர இவ்வாறு கூறியுள்ளார்.
அதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
