வவுனியா, மதுரா நகர் பகுதியில் மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
வவுனியா, மதுராநகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வசிக்கும் மேற்படி இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாகக் கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளன. இந்நிலையில், வெளியில் சென்றுவிட்டு நேற்று மாலை வீடு திரும்பிய மாமன் மீதே மருமகன் கோடாரியால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த மாமனாரை உறவினர்கள் வவுனியா வைத்தியசா லைக்குக் கொண்டு சென்ற பார்தும் அவர் அங்கு கொண்டு செல்லப்படுவ தற்கு முன்னரே மரணமடைந்து விட்டார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மோகன் என்ப வரே மரணமடைந்தவராவார். சம்பவ இடத்துக்குச் சென்ற சிதம்பர புரம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
