யாழில் அதீத வெப்பத்தால் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று யாழ். போதான வைத்தியசாலை யின் பொது வைத்திய நிபுணர் ரி.பேரானந்தராஜா தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்தியசாலை யில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப் பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“யாழ்ப்பாணத்தில் தற்போது அதிக வெப்பமான காலநிலைகாணப்படுகின்றது. ஒரு மனிதனின் உடலானது 40.5 சென்டிகிரேட் அல்லது 105 பரனைட் வெப்பத்தையே தாங்கும். அதனைத் தாண்டும்போது, தீவிரமான பாதிப்புகள் ஏற்படும். அதனால் வியர்வை அதிகரிப்பு, வியர்குருக்கள் போடுதல் போன்றவை ஏற்படும். வியர்வை அதிகரிப்பால் உட லில் நீரின் அளவு குறைவடைந்து மயக்கம் ஏற்படும். இந்நிலை தொடர்கின்றபோது “ஹீட் ஸ்ரோக்” ஏற்படும்.

அத்துடன் சிறுநீரகம், இருதயம், சுவாசப்பை போன்றவை செயல் இழக்கும். அதேவேளை, குருதி சிறுதட்டுக்களின் எண்ணிக்கை குறை வடைந்து உடல் நிலை மிக மோசமாகப் பாதிக்கப்படும். மூளை செயல் இழந்து மயக்கம் ஏற்படும் சம்பவங்களும் நிகழும்.

யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த சுமார் 5 பேர் “ஹீட் ஸ்ரோக்” காரண மாக உயிரிழந்துள்ளனர். அவர்களின் உயிரிழப்புக்கு அவர்களுக்கு ஏற்கனவே இருந்த நோய் நிலைமைகள் காரணமாக இருந்தாலும் அதிகரித்த வெப்பநிலையே நோயைத் தீவிரப்படுத்தி அவர்களின் உயிரிழப்புக்குக் காரணமாகும். எனவே, வெப்பத்தின் பேராபத்தான நிலையில் இருந்து எம்மைக் காப்பாற் றிக்கொள்ள வேண்டும். “ஹீட் ஸ்ரோக்” வரமால் தடுக்க குளிர் மையான பானங்களை அருந்த வேண் டும்.
வீட்டில் உள்ள வயோதிபர்களுக்கு போதிய நீராகாரங்களை வழங்க வேண்டும்.

வயதானவர்களுக்குத் தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே, அவர்களுக்குத் தொடர்ச்சியாக நீரா காரங்களை வழங்க வேண்டும். குறிப்பாக தர்ப்பூசணி, வெள்ளரிப் பழம் , தோடம்பழம் போன்ற பழங்களை உண்ண வேண்டும். குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ வேண்டும். கண் புருவங்களை அடிக்கடி நீரினால் கழு விக்கொள்ள வேண்டும். அதன் ஊடாக உடலின் வெப்பநிலையைத் தணிக்க முடியும். உடலின் வெப்பநிலையை குறைப்ப தன் ஊடாகவே “ஹீட் ஸ்ரோக்” வராமல் தடுக்க முடியும்.” – என்றார்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles