சுதந்திரக்கட்சி என்பது குடும்ப சொத்து கிடையாது!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் பிளவுபட்டுள்ள அணிகள் ஒன்றுபட வேண்டும் எனவும் சந்திரிக்கா அம்மையாரும் இணைய வேண்டும் எனவும் அக்கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ எனக்கு ஜனாதிபதியாக வேண்டும் என்ற கனவு இல்லை. எனக்கான தகுதி என்ன என்பது எனக்கு தெளிவாக தெரியும். கட்சியை கட்டியெழுப்புவதே எனது நோக்கம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்பது ராஜபக்ச குடும்பத்துக்கோ அல்லது பண்டாரநாயக்க குடும்பத்துக்கோ உரித்தானது அல்ல, அது மக்களின் கட்சி .
எனவே, பல அணிகளாக பிளவுபட்டுள்ள சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் கட்சியை மீள கட்டியெழுப்ப முடியும்.

கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவுசெய்வதற்கென நடைமுறையொன்று உள்ளது. அந்த விதிமுறைகளை கருத்திற்கொள்ளாமலேயே மைத்திரிபால சிறிசேன தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்துள்ளார்.” – என்றார்

Related Articles

Latest Articles