பிளே ஆப் சுற்றில் இருந்து 2-வது அணியாக வெளியேறியது பஞ்சாப்

ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் – பெங்களூரு
அணிகள் மோதியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி பெங்களூரு அணி விராட் கோஹ்லி, பட்டிதாரின் அதிரடி அரை சதத்தால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் குவித்தது.பஞ்சாப் தரப்பில் ஹர்சல் படேல் 3 விக்கெட்டும் வித்வத் கவேரப்பா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங்- ஜானி பேர்ஸ்டோவ் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும் ஜானி பேர்ஸ்டோவ் 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து ரிலீ ரோசோவ் – ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசிய ரிலீ ரோசோவ் 61 ரன்கள் குவித்து அவுட் ஆகினார்.

அடுத்த சிறிது நேரத்தில் ஷஷாங்க் சிங் 37 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த வீரர்கள் ஜிதேஷ் சர்மா 5, லிவிங்ஸ்டன் 0, சாம் கரன் 22, அசுதோஷ் சர்மா 8, ஹர்சல் படேல் 0 என விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இதனால் பஞ்சாப் அணி 17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 60 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி வெற்றி பெற்றது. ஆர்சிபி தரப்பில் சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் பிளே ஆப் சுற்றில் இருந்து 2 -வது அணியாக பஞ்சாப் அணி வெளியேறியது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles