மொட்டு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா?

எதிர்வரும் செப்டம்பர் இறுதியில் அல்லது ஒக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் இறுதி முடிவொன்றை எடுப்பதற்காக விசேட கூட்டமொன்று அடுத்தவாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மொட்டு கட்சி நான்கு பேரின் பெயர்கள் தொடர்பில் பரிசீலித்துவருகின்றது. அந்த ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவின் பெயரும் உள்ளது. அவர் குறித்து மொட்டு கட்சி விசேட கவனம் செலுத்தியுள்ளது எனக் கூறப்படுகின்றது.

மே தினக் கூட்டத்தின்போதுகூட தம்மிக்க பெரேராவுக்கு மொட்டு கட்சி முன்வரிசை ஆசனத்தை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles