சீரற்ற காலநிலையால் நால்வர் பலி: அடை மழை தொடரும்

நாட்டில் நிலவும் பலத்த மழையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர்.

மாதம்பே – குளியாப்பிட்டி வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 39 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
நாத்தாண்டிய, பிலகட்டுமுல்ல பகுதியில் நேற்று பிற்பகல் மோட்டார் சைக்கிளொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை படுகாயமடைந்து மாரவில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.

பலாங்கொடை – இராசகலை – ஹெரமிட்டிகல 54 ஆவது பிரிவில் நேற்று முன்தினம் இரவு மரமொன்று முறிந்து வீழ்ந்தமையால் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலத்த மழையுடனான வானிலையால் 15 மாவட்டங்களை சேர்ந்த 67,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பலத்த மழையினால் 12 நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles