டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கியை வடிவமைக்கும் கோடீஸ்வரர்

அமெரிக்காவின் ஓஹையோ பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வரும் கோடீஸ்வரரான லேரி (Larry Connor), கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலை பார்க்க புதிய நீர்மூழ்கி ஒன்றை வடிவமைத்து வருகிறார். இதன் மூலம் வரும் 2026-ம் ஆண்டு கடலுக்கு அடியில் அவர் செல்ல திட்டமிட்டுள்ளார்.

74 வயதான அவர், சாகச பிரியர். டைட்டானிக் கப்பலை பார்ப்பதற்காக ட்ரைடன் சப்மரைன்ஸ் என்ற நிறுவனத்தை அவர் அணுகியுள்ளார். அவருக்காக வடிவமைக்கப்பட்டு வரும் இந்த நீர்மூழ்கியில் இரண்டு பேர் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Acrylic-hulled வகையில் இந்த நீர்மூழ்கி இருக்கும் என தெரிகிறது. பலகட்ட சோதனை மேற்கொண்ட பிறகு, முறையாக சான்று பெற்று ஆழ்கடல் சாகசத்துக்கு இந்த நீர்மூழ்கி செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடலில் சுமார் 12,500 அடி ஆழத்தில் செல்லும் இந்த நீர்மூழ்கி வெறும் பயணமானதாக மட்டுமல்லாமல் அறிவியல் பூர்வமான ஆய்வுகளும் மேற்கொள்ள உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.

இது குறித்து லேரி தெரிவித்துள்ளதாவது. டைட்டானிக் கப்பலை பார்க்க செல்லும் வெறும் பயணம் அல்ல. இது ஆய்வு சார்ந்த மிஷன். இதன் மற்றொரு நோக்கம் என்னவென்றால் பாதுகாப்பான முறையில் ஆழ்கடலுக்கு பயணிக்கலாம் என்பதை உலகுக்கு நிரூபிப்பது. இதன் மூலம் மீண்டும் மீண்டும் ஆழ்கடல் பயணம் மேற்கொள்ள முடியும் என கூறியுள்ளார்.

இந்த நீர்மூழ்கிக்கு ‘தி எக்ஸ்புளோரர் – ரிட்டர்ன் டு தி டைட்டானிக்’ என பெயர் வைத்துள்ளதாக தகவல். மேலும், சுமார் 2 மணி நேரத்தில் கடலில் 13,000 அடி ஆழம் வரை இதில் பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைட்டன்: ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் கடந்த ஆண்டு மேற்கொண்டது. இதற்காக 21 அடி நீளத்தில் ‘டைட்டன்’ என்ற சிறப்பு நீர்மூழ்கியை அந்த நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த ஆண்டு இதில் ஐந்து பேர் பயணம் மேற்கொண்ட நிலையில் அதன் தகவல் தொடர்பு துண்டானது. தீவிர தேடுதலுக்கு பிறகு அவர்கள் ஐந்து பேரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டனர்.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles