கொழும்பிலிருந்து பதுளைக்குவந்த எட்டுப்பேர், அவரவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, பதுளை மாநகர பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.
பதுளை மாநகரசபைக்குற்பட்ட பதுளை பகலகம, கட்டுபெலல்லகம ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மேற்குறிப்பிட்ட எட்டுப்பேர், கொழும்பில் தமது உறவினர் வீடுகள் மற்றும் தமது சொந்த தேவைகள் கருதி அரச திணைக்கங்கள் ஆகியவற்றுக்கு சென்றுள்ளனர்.
அந்நிலையில் அவர்கள் சென்றிருந்த பிரதேசங்கள்,கொரோனா தொற்று குறித்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக்கப்பட்டன. அதனால், இவர்கள் எட்டுப்பேருக்கும் சொந்த ஊரான பதுளைக்கு திரும்ப முடியாமல், உறவினர் வீடுகளிலேயே தங்கியிருந்தனர்.
தற்போது,கொழும்பிலிருந்து பதுளைக்கு பஸ் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதால், அவர்கள் அனைவரும் பதுளைக்கு வந்தனர். இதுகுறித்த தகவல்கள் பதுளை மாநகர பொது சுகாதாரப் பிரிவினருக்கு தெரியவரவே ,அவர்கள் விரைந்து, குறிப்பிட்ட எட்டுப்பேரையும், மேற்குறிப்பிட்ட பதுளை மாநகருக்குற்பட்ட பிரதேசங்களின் அவரவர்களின் வீடுகளிலேயே சுய தனிமைப்படுத்தியுள்ளனர்.
14 தினங்களுக்கு இவர்கள் சுய தனிமையிலிருக்கும் படியும், அக்காலப் பகுதியில் அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கருதிபத்தாயிரம் ரூபாபெறுமதியானஉலர் உணவுப் பொதிகளும் வழங்கப்பட்டிருப்பதாகவும், இன்னும் ஒருசிலதினங்களில் அவர்களுக்குபி.சி. ஆர்.பரிசோதனைகள் செய்யப்படுமென்றும் பொதுசுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்ட இவ் எட்டுப்பேரில் ஒருபெண்ணும், ஏழு ஆண்களும் உள்ளடங்கியுள்ளனர்.
எம். செல்வராஜா, பதுளை










