13 ஐ அமுல்படுத்துவேன்: சஜித் உறுதி

“ பல்வேறு தலைவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வழிகளில் வெவ்வேறு பொய்களைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே கூறிவருகின்றது. சர்வதேச தொழிலாளர் தினத்தன்றும் அந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

உயர் சட்டப் புத்தகத்திலுள்ள 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் அமுல்படுத்தப்படும். நாட்டின் வடக்கு, கிழக்கு, மேல் என 9 மாகாணங்களிலும் உள்ள மக்களுக்கும் இந்த வாக்குறுதியை வழங்குகிறேன். இதனை நடைமுறைப்படுத்தத் தயங்கப் போவதில்லை.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இதன் மூலம் இப்பிரதேச மக்களின் அரசியல், மத, சமூக, கலாசார உரிமைகள் வழங்கப்படும். நாட்டின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகளே உள்ளடங்கியுள்ளது. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த அத்தியாயத்தை விரிவுபடுத்தி இதில் பொருளாதார, சமூக, மத, சுகாதார, கல்வி உரிமைகள் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 225 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கிளிநொச்சி, பாரதி வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 09 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நாட்டில் 1st class citizens, 2nd class citizen, 3rd class citizen என்ற வகைப்பாடுகள் எதுவும் இல்லை. எல்லோரும் ஒன்று போல் சமமானவர்களே. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் பர்கர்கள் உட்பட 220 இலட்சம் குடிமக்களும் 1st class citizen ஆகும். இதற்கான ஏற்பாடுகள் இல்லாததால், நிர்வாகத் துறையில் சட்டம் ஒழுங்கும் துறையில் ஏற்பாடுகளை மேற்கொண்டு யதார்த்தமாக நடைமுறைப்படுத்துவோம் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தம் குறித்து பேசும் போது பல்வேறு தலைவர்கள், மேலே பார்த்துக் கொண்டு இருத்தல், கேட்காதது போல் நடந்து கொள்ளுதல், பிற தலைப்புகளைக் கொண்டு வருதல், பயப்படுதல் மற்றும் வெட்கப்படுதல் போன்ற அரசியல் சந்தர்ப்பவாதிகளாக நடந்து கொண்டாலும், தான் நேராகப் பேசும் நபர் என்றபடியால், 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவேன். சிங்களவர்களாக இருந்தாலும், தமிழர்களாக இருந்தாலும், பர்கர்களாக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் ஒன்றாய் கைகோர்த்து, ஒரு தாயின் பிள்ளைகள் போல் நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles