பெருந்தோட்டத் துறையினரின் கல்வி, சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துவது குறித்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளுக்கான (USAID) ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி தூதரக பணிப்பாளர் கெப்ரியல் கிராவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
இவ்விடயங்களை முன்னேற்ற ஐக்கிய அமெரிக்க சர்வதேச அபிவிருத்தியின் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டது.
நாட்டின் தேயிலைத் தோட்டங்களில் உள்ள தேயிலை வகைகளை பொருளாதார வாய்ப்புக்களை உருவாக்கப் பயன்படுத்தல், பாதையோரங்களில் வாழும் மக்களின் வருமானத்தை அதிகரித்தல் என்பவற்றுக்கான விஷேட திட்டங்கள் தயாரிப்பது பற்றியும் இவர்கள் கவனம் செலுத்தினர். இப்பணிகளைச் செய்வதற்கு என்னும் உறுதியுடன் உள்ளதாக அமைச்சர் ஜீவன்தொண்டமான் இதன்போது அமெரிக்க அதிகாரியிடம் குறிப்பிட்டார்.